விமானம் மூலம் கோவை வந்த 2 திருநங்கைகள் உட்பட 10 பேருக்கு கரோனா

விமானம் மூலம் கோவை வந்த 2 திருநங்கைகள் உட்பட 10 பேருக்கு கரோனா
Updated on
1 min read

விமானம் மூலம் கோவை வந்த2 திருநங்கைகள் உட்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன்தினம் கோவை வந்தவர்களில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும், கோவையைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும் கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப் பட்டது.

இதேபோல, மும்பையில் இருந்து விமானம் மூலம் வந்த கோவை, கணபதியைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர், 50 வயது பெண் ஒருவருக்கும் கரோனா இருப்பது 'ஸ்வாப்' பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தையடுத்து, இந்த 4 பேரும் நேற்று கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

ஈரோட்டில் ஒருவருக்கு கரோனா

ஈரோடு சூளை பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்னையில் பணிபுரிந்து வந்தார். ஈரோடு திரும்புவதற்காக விமானம் மூலம் சேலம் வந்த அவருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஈரோட்டில் வீட்டில் இருந்த அப்பெண்ணை, மருத்துவக் குழுவினர் பெருந் துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

சேலத்தில் 5 பேருக்கு கரோனா

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள உணவக உரிமையாளர் மற்றும் சப்ளையர் 3 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்கள் 4 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, உணவகத்தில் பார்சல்வாங்கிச் சென்றவர்களை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், சேலம் கொண் டலாம்பட்டியைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் இரு நாட்களுக்கு முன்னர் சண்டிகரில் இருந்து ஊர் திரும்பினார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.

லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கூட்டப்பள்ளி காலனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சீனிவாசன் (49). இவர் கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in