

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓமக்குளம் மற்றும் குவ ளைக்கால் பகுதிகளை இணைக்கும் வகையில், ரூ.1.47 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் பால கட்டுமானப் பணிகளை நேற்று பார்வையிட்ட தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அண்மையில் தலைமைச் செயலரை சந்தித்த பின்னர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் அளித்த பேட்டியின் அடிப்படையிலும், திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், தலைமைச் செயலரிடம் 98,752 மனுக்கள் வழங் கப்பட்டதில், ஒன்றுகூட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடர்பான மனுக்கள் இல்லை.
அவை அனைத்தும் உணவுத் தேவையை அடிப்படையாக கொண்ட மனுக்கள் என்பது ஆய்வில் தெரியவந்ததன் அடிப் படையிலேயே, மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரசு சார்பில் என்ன மாதிரியான நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மட்டுமே எனது செய்தியாளர் சந்திப்பில் விளக் கினேன்.
அதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினர் ஏதேதோ கூறி வருகின்றனர். மனு வழங்கிய விவகாரத்தில் உண்மை வெளி வந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில், உணர்ச்சி வசப்பட்டு, மீண்டும் மீண்டும் பொய் சொல்லி வரு கின்றனர் என்றார்.