நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக நெல்லையில் கனமழை பெய்த நிலையில் இன்று பரவலாக மிதமான மழை பெய்தது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 3, சேர்வலாறு- 1, மணிமுத்தாறு- 10, அம்பாசமுத்திரம்- 2.80, சேரன்மகாதேவி- 1.20, பாளையங்கோட்டை- 3, திருநெல்வேலி- 1, ராமநதி- 3, கருப்பாநதி- 3, குண்டாறு- 11, அடவிநயினார்- 4, ஆய்குடி- 1.8, தென்காசி- 6.4, செங்கோட்டை- 5 மி.மீ என்றளவில் மழை பெய்திருந்தது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 36.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து 425 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in