

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் முதுகலை பட்டப் படிப்புக்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு மீன் வளர்ப்பு, மீன்வளச் சூழலியல், மேலாண்மை, மீன்வளப் பொருளாதாரம், தரக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் முனைவர் பட்டப் படிப்பும், 10 பிரிவுகளில் மீன்வள அறிவியல் முதுகலை பட்டப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இவற்றில் சேர, தகவல் தொகுப்பேடு மற்றும் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ஆகியவற்றை பல்கலைக் கழகத்தின் இணையதளத் திலிருந்து (>www.tnfu.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 1,000-ஐ இணையதளம் வழியாக வரும் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.