

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மாந்தோப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான காப்பு காடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள தோப்புகளில் மா, தென்னை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாம்பழ சீசன் என்பதால் மா மரத்தில் மாங்காய்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக் கோயில் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் மாமரக் கிளைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அதோடு, காய்த்துள்ள மாங்காய்களையும் பறித்துச் சாப்பிட்டுச் சென்றுள்ன. தொடர்ந்து விவசாயிகளின் தோப்புகளுக்குள் புகுந்து காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அதோடு, யானைகளை வனத்திற்குள் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.