வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி
Updated on
1 min read

வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து, ஆதிதிராவிட மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 22 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இலவச பயிற்சி வகுப்பு களில், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், மாண வர்களுக்கு பயிற்சி அளித்து வரு கின்றனர். இந்நிலையில், 10,000 வங்கி காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 3 மாத காலத்துக்கு வாராந்திர இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

விருப்பம் உள்ளவர்கள் இந்த இலவச வகுப்பில் சேர 9444641712, 9444030745, 9444982364, 9444928162, 9444241696 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என, பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in