

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை அதிமுக வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
இதுகுறித்து சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது:
பிரதமர் - முதல்வர் சந்திப்பு குறித்து தான் யாரையும் புண் படுத்தும் எண்ணத்தில் கருத்து கூறவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித் துள்ளார். அதன் பிறகும் அதிமுகவினர் தொடர்ந்து போராட் டங்களை நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் மீது பெரும் தாக்குதல் நடந்துள்ளது. காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினர் தங்களது போராட்டங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.