Published : 30 May 2020 06:16 AM
Last Updated : 30 May 2020 06:16 AM

ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க கோரும் வழக்கு: தீபாவும், தீபக்கும் ஜெ.வின் நேரடி வாரிசுதாரர்கள்- தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுதாரர்கள் என தீர்ப்பில் திருத்தம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல ஜெயலலிதாவின் சொத்து களை நிர்வகிக்க வாரிசுகள் என்ற அடிப் படையில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என ஜெயலலிதா வின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கடந்த 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ‘‘ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள்’’ என அறிவித் திருந்தனர்.

இந்நிலையில் தீபாவும், தீபக்கும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘எங்களது பாட்டி சந்தியாவின் சொத்துகள் பாரம்பரிய முறைப்படி எங்களது தந்தைக்கும் அத்தைக்கும் கிடைத்தது. எங்களது அத்தை ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லாத சூழலில் நாங்களே அவருடைய நேரடி வாரிசு தாரர்கள். எனவே, எங்களை ஜெய லலிதாவின் இரண்டாம் நிலை வாரிசு தாரர்கள் என தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளதை மாற்றி, இந்திய வாரிசுரிமை சட்டப்படி நேரடி வாரிசுகள் என திருத் தம் செய்து அறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் என்.கிருபாகரன், அப்துல் குத் தூஸ் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

நாங்கள் கடந்த மே 27 அன்று பிறப்பித்த தீர்ப்பில், தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் இரண் டாம் நிலை வாரிசுகள் என அறிவித்து இருந்தோம். ஜெயலலிதாவின் சொத்து களுக்கு இவர்கள் இருவர் மட்டுமே வாரிசுகள் என கூறியிருந்தோம்.

இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(1)(d)–ன்படி திருமணமாகாத ஜெய லலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால் தீபாவும், தீபக்கும் அவரது நேரடி வாரிசுகள் என தீர்ப்பில் திருத்தம் செய்கிறோம். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் அல்ல. நேரடி வாரிசுதாரர்கள் ஆவர். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் அறிவுரை

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளிடம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலை யில், உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டதும் தீபா தனது கணவருடன் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்’’ என்றார்.

அது தொடர்பாக தீபா தரப்பு வழக் கறிஞர் சாய்குமரனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ‘‘தீர்ப்பு வெளியானதும் போயஸ் கார்டன் இல்லத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அங்கு சென்று இருக் கலாம். மற்றபடி எந்த பிரச்சினையிலும் ஈடுபடவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என தீபாவையும் தீபக்கையும் இந்த உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து இருவரும் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாமேயன்றி, தேவையற்ற பிரச்சி னைகளில் ஈடுபடக் கூடாது’’ என அறிவுரை வழங்கினர்.

நீதிமன்ற தீர்ப்பை அதிமுக தலைவர்கள் தலைவணங்கி ஏற்க வேண்டும்: தீபா

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது:

வீடு மட்டுமின்றி ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் எங்கள் வசம் எடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அரசு என் மீது வீண் பழிகளை சுமத்துகிறது. ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் சிகிச்சையின் போது பார்க்கவும் அனுமதிக்கவில்லை. தனிநபர்களும், காவல் துறையை நிர்வகித்த அப்போதைய முதல்வரும் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக தலைவர்கள் தலைவணங்கி ஏற்க வேண்டும். என்னை போயஸ் கார்டன் பகுதிக்கு வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர். எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஜெயலலிதா இறந்த பின்னரும் கொச்சைப்படுத்துகின்றனர். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் மீது மேல்முறையீடு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x