Published : 29 May 2020 05:32 PM
Last Updated : 29 May 2020 05:32 PM

தடையை மீறி கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள்: கட்டிடத்திற்கு சீல், ஏழு பேர் மீது வழக்கு

கொடைக்கானல்

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலத்தில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல்வைத்தது. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே கரோனா தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை தடை செய்யப்பட்டது. விடுதிகளை மூடவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் இன்று வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியதபோதும் சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சிலவாரங்களாக மருத்துவ இ பாஸ் பெற்று பலர் தங்கள் சொந்த வாகனத்தில் கொடைக்கானலுக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த நபர்கள் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள், போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் குடியிருப்பு கட்டிடத்தை விடுதியாக மாற்றில் கரூரை சேர்ந்த நான்கு பேரை தங்கவைத்தது தெரியவந்தது. இதையடுத்து கட்டிடடத்திற்கு நகராட்சி அலுவலர்கள் சீ்ல்வைத்தனர்.

கட்டிடத்தில் தங்கிய கரூரைச் சேர்ந்த நான்கு பேர், கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்தவர், கட்டிட உரிமையாளர், கட்டிட பாதுகாவலர் என ஏழு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசின் விதிமுறைகளை மீறி மருத்துவ பாஸ் வாங்கிவந்து பலர் கொடைக்கானல் மலைப்பகுதியில் தங்கள் சொந்த கட்டிடம் மற்றும் நகருக்கு வெளிப்புறங்களில் தங்கியுள்ளனர். இவர்களைக் கணக்கெடுத்து வெளியேற்றவேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x