Published : 29 May 2020 12:46 pm

Updated : 29 May 2020 12:46 pm

 

Published : 29 May 2020 12:46 PM
Last Updated : 29 May 2020 12:46 PM

ஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு மறுப்பு குறித்து ஆலோசனை

all-party-meeting-headed-by-mk-stalin
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

வரும் 31-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெறும் என அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மே 29) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம், காணொலி காட்சி வழியாக நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை மத்திய அரசு மறுத்து வருவது குறித்தும், கரோனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


திமுகஅனைத்துக் கட்சிக் கூட்டம்மு.க.ஸ்டாலின்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மருத்துவக் கல்வி இடஒதுக்கீடுDMKMK stalinAll party meetingCorona virusMedical education reservationCORONA TNONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author