Published : 29 May 2020 06:34 AM
Last Updated : 29 May 2020 06:34 AM

பொதுப்பணி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி துறை சார்பில் ரூ.352 கோடியில் புதிய பாலங்கள், கட்டிடங்கள்- முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற் றும் வீட்டுவசதித் துறை சார்பில் ரூ.352 கோடியே 11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், தடுப் பணைகள், கட்டிடங்கள், குடி யிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வன்னியம்பட்டி - மணியம்பலம் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை தலைமைச் செயலகத் தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, திரு வாரூர், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.29 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங் களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

விழுப்புரம், சேலம் மாவட்டங் களில் ரூ.70 கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஆற்றுப் பாலம், 3 சாலை மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியே செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் 158.35 கி.மீ. வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்கு தல், புனரமைத்தல், நவீனமயமாக் கல் திட்டத்தின்கீழ் ரூ.230 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல் வர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் நொய்யல் ஆறு சீரமைவது டன், 18 அணைக்கட்டுகள், 22 முறைசார்ந்த குளங்கள், சிதில மடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கி களின் மதகுகள், விவசாய நிலங் களுக்கு பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்கால்களின் மதகுகளை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 11 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.

திருவண்ணாமலை, திருப்பத் தூர், வேலூர், திண்டுக்கல், திருப் பூர் மாவட்டங்களில் ரூ.16 கோடியே 56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், கசிவுநீர் குட்டை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். இதுதவிர, திருவாரூர், திண்டுக்கல், கோவை மாவட்டங் களில் தடுப்பணைகள், நீரொழுங்கி புனரமைத்தல் என ரூ.17 கோடியே 1 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக் கும் அடிக்கல் நாட்டினார்.

குடியிருப்புகள்

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் அஞ்சுகிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனி அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பகுதியில் ரூ.36 கோடியே 24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சை, அரியலூர், சென்னை மாவட்டங்களில் ரூ.46 கோடியே 68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 560 குடியிருப்புகளையும் திறந்துவைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் சென்னை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் ரூ.216 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,232 அடுக்குமாடி குடியிருப்புகள், 1,214 மனை மேம்பாட்டு திட்டத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்,டெல்லிக்கான தமிழக சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x