விவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்?- மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

விவசாயி வெங்கடேசனின் விவசாய மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்.
விவசாயி வெங்கடேசனின் விவசாய மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தை அடுத்த பூதாமூரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன், ஆதனூரில் தனது விளைநிலத்தில் அமைத்த ஆழ்குழாய்க் கிணற்றுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெற்றார். அந்த இணைப்புடன், ஒரு மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித் தனர். இதையடுத்து, “தட்கல், தாட்கோ உட்பட அனைத்து வகை விவசாய மின் இணைப்புக்கும் மீட்டர் பொருத்தப்படாது” என்று தமிழக மின் துறை அமைச்சர் தங் கமணி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த மின் மீட்டர் பிரச்சினை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது, “ஒவ்வொரு மாதமும் விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரம் எவ்வளவு என அறிய முடியாததால், அதற்குரிய மானி யத்தை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் தொடர்ந்து இடர்பாடு நீடிக்கிறது. எனவே, அரசின் அறிவுறுத்தலின்பேரில், மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக பொருத்தப்பட வில்லை” என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியபோது, “மின் திறனை கணக்கிட வேண்டுமெனில் ஒவ்வொரு மின்மாற்றியிலும் பொதுவான மின் மீட்டரை பொருத்தினாலே போதும். இனி மின் மீட்டர் பொருத்தப்படாது என முதல்வரும், மின்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு அளித்த உத்தர வாதம் போன்று நீர்த்துப் போகாம லிருக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in