

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வடிவேலு (30). இவர், திருப்பத்தூர் மாவட் டம், நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
வடிவேலு நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீ ரென வெளியே சென்றதாக கூறப் படுகிறது. அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு திரும்பிய அவர் மருத்துவ மனைக்கு எதிரே மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதைக்கண்ட பொதுமக் கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து அங்கு வந்து விசாரணை நடத்தி திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார். துணை இயக்குநர் சுரேஷ் நேற்று விசார ணை நடத்தினார்.
அதில், பணியின்போது மருத் துவர் வடிவேலு மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை இடைநீக்கம் செய்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் நேற்று உத்தரவிட்டார்.