

கரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கபசுரக் குடிநீருக்கு உள்ளது. இது ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது என்று சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைர ஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் பல நாடு கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அலோபதி மருந்து களுடன் (ஆங்கில மருத்துவம்) சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் விரைவாக குண மடைந்தும் வருகின்றனர். டெங்கு காய்ச்சலின்போது எப்படி நிலவேம்பு குடிநீர் பிரபலமானதோ அதேபோல், தற்போது கரோனா வைரஸ் சிகிச்சையில் கபசுரக் குடிநீர் பிரபலமாகி வருகிறது.
ட்விட்டரில் சர்ச்சை கருத்து
இந்நிலையில் தேசிய தொற்று நோய் நிலைய துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர், “கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மை யல்ல. எந்த உணவும் நம்மை கரோனாவிலிருந்து காப்பாற்றும் என்பதற்கான ஆதாரம் இல்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட் டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனையின்படி தமிழகத்தில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவை வழிநடத்து பவரே, கபசுரக் குடிநீர் குறித்து கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் க.கனகவல்லி கூறியதாவது:
ஆயுஷ் அமைச்சகத்தின் வழி் காட்டுதலின்படி கரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் அவர்கள் விரைவாக குண மடைந்து வருகின்றனர். கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்ப வர்களுக்கும் இந்த குடிநீர்கள் வழங்கப்படுகின்றன.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவைகளுக்கு கப சுரக் குடிநீர் சிறந்த மருந்தாகும். இந்த அறிகுறிகள் கரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. அதனால், வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . கபசுரக் குடிநீரில் 15 மூலிகைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கின்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கபசுரக் குடிநீரில் கரோனா வைர ஸை எதிர்க்கும் திறன் இருப்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி கள் நடந்து வருகின்றன. விரை வில் கபசுரக் குடிநீரால் கரோனா வைரஸை முழுமையாக குணப் படுத்த முடியும் என்ற அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.