Published : 28 May 2020 06:27 AM
Last Updated : 28 May 2020 06:27 AM

கரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 675 மருத்துவர் நியமனம்: ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களில் இதர நோய் பாதிப்புடையவர்கள் உயிரிழந்து வருவதால், சிகிச்சை அளிக்க அதிக அளவில் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இதையடுத்து, மருத் துவர்கள் நியமனத்துக்கு தமிழக அரசு முக்கியத் துவம் அளித்து வருகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் 27-ம் தேதி, காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் புதிதாக 530 மருத்துவர்கள், 1,508 லேப்-டெக்னீஷியன்கள், 1,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒப் பந்த அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டது.

தேவையிருப்பின் பணி நீட்டிப்பு

இந்நிலையில், தற்போது 675 புதிய மருத் துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த முடிவெடுத்து, மருத்துவ தேர்வு வாரியத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப் படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேரவும், 3 மாதத்துக்கு பின் தேவையிருந்தால் பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் தேசிய நலவாழ்வு இயக் கத்தின் மூலம் இவர்களை நியமிக்க இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த 675 மருத்துவர்களும் தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் பெரிய கல்லூரிகளுக்கு தலா 30 பேரும், சிறிய கல்லூரிகளுக்கு தலா 20 பேரும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x