

அதிக நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நெல்லை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதிக நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், வணிக நிறுவனங்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களின் முன்பு வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், “கோவிட்-19” பற்றிய செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பது பற்றிய விளம்பர அறிவிப்புகளை கட்டாயம் ஒட்டியிருக்க வேண்டும்.
மாநகராட்சியின் கண்காணிப்பு குழுவினர் ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக கடை சீல் வைக்கப்படும்.
திருநெல்வேலியில் நோய்த்தொற்று காரணமாக தடை செய்யப்பட்டுள்ள வார்டு:12 -திம்மராஜபுரம், வார்டு:13 - காளிகம்பர் தெரு, வார்டு: 17-கே.டி.சி நகர், வார்டு: 18 -ஆரோக்கியநாதபுரம், வார்டு: 28-வசந்தம் நகர், வார்டு: 4 - சிந்துபூந்துறை, வார்டு:34- கருங்குளம், வார்டு: 30 - நடராஜபுரம், வார்டு:26- வரசக்தி விநாயகர் கோவில் தெரு, வார்டு: 54 பருவதசிங்க ராஜா தெரு ஆகிய கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் சலூன் கடைகளுக்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.