

மும்பையிலிருந்து 2 சிறப்பு ரயில்களில் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 2250 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருநெல்வேலி வந்தடைந்தனர்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மகராஷ்டிரா மாநிலத்தில் தொழில் நிமித்தம் வசித்து வந்தனர்.
தற்போது கரோனா பாதிப்பு அம்மாநிலத்தில் அதிகரித்து வருவதை அடுத்து அங்கிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள்.
இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட 2 சிறப்பு ரயில்களில் 2250 பேர் இன்று திருநெல்வேலிக்கு வந்தடைந்தனர்.
இதனிடையே நாகர்கோவிலில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்காக திருநெல்வேலியிலிருந்து 56 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் இன்று புறப்பட்டுச் சென்றனர்.