

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரணப் பொருட்களை வழங்கி பேசியதாவது: கரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நிவாரண நடவடிக்கையிலும், தொற்று ஏற்பட்டோருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதிலும் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு சிலதளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், சமூக இடைவெளியுடன் பயணிகளை முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு பயணமும் முடிந்த பிறகு பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் ஆட்டோவை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். ஆட்சியர் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் கலந்து கொண்டனர்.