தூத்துக்குடியில் இருந்து 67 தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடியில் இருந்து 67 தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்பி வைப்பு
Updated on
1 min read

தூத்துக்குடியில் இருந்து மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு 67 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 67 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி தாலுகாவில் இருந்து 43 பேர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து 6 பேர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களில் இருந்து 18 பேர் என மொத்தம் 67 பேர் இரண்டு பேருந்துகளில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கிருந்து சிறப்பு ரயில் மூலமாக அவர்கள் மத்திய பிரதேசம் புறப்பட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in