

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாள்தோறும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 297 ஆக இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து ஊருக்கு திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பலருக்கு நோய் தொற்று உறுதியானது.
அந்தவகையில் சேரன்மகாதேவியில் 3, திருநெல்வேலி மாநகரில் 3, களக்காட்டில் 6, மானூரில் 5, பாளையங்கோட்டை தாலுகாவில் 2, வள்ளியூரில் 6, நாங்குநேரியில் 7 என்று மொத்தம் 32 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 329 ஆனது.
மாவட்டத்தில் நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.