Last Updated : 26 May, 2020 11:32 AM

 

Published : 26 May 2020 11:32 AM
Last Updated : 26 May 2020 11:32 AM

ஊரடங்கு உத்தரவை மீறி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்;  5 பேர் கைது

படவிளக்கம்; பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டும்போது எடுக்கப்பட்ட படம்.

விழுப்புரம்

ஊரடங்கு உத்தரவை மீறி பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய வழக்கறிஞர் உட்பட 12 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதனை அறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், கடந்த 8ம் தேதி மாலை தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடியது தெரியவந்தது.

இதையடுத்து வழக்கறிஞர் பிரபு, அவரது நண்பர்களான கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், முண்டியம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன், விழுப்புரம் வி.மருதூர் மோகன், ராஜேஷ், தக்கா தெருவை சேர்ந்த ஜமாலுதீன், பாண்டியன் நகரை சேர்ந்த பிரகதீஸ்வரன், முத்தோப்பு வினோத், விக்கி உள்பட 12 பேர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக 5 பிரிவுகளின் கீழ் போலீஸா ர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஆனந்த் ( 31), மோகன் (25), பிரகதீஸ்வரன் (25), பார்த்திபன் (28), ராஜேஷ் (25) ஆகிய 5 பேரை நேற்று மாலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x