வாடிக்கையாளரை அலைக்கழித்ததால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர வங்கிக்கு உத்தரவு

வாடிக்கையாளரை அலைக்கழித்ததால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர வங்கிக்கு உத்தரவு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சின்னமுத்து தெருவைச் சேர்ந்த ஜெய்கவிதா(44), கரூரில் உள்ள 2 ஜவுளி நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தார். இந்நிறுவனங்கள் கடந்த 2008-ம் ஆண்டு நிலங்களை அடமானம்வைத்து கரூர் சிண்டிகேட் வங்கியில் கடன் பெற்ற நிலையில், 2009-ல் 2 நிறுவனங்களில் இருந்தும் ஜெய்கவிதா விலகிவிட்டார்.

இவ்விரு நிறுவனங்களின் கடன்களும் அதன் பிறகு தீர்க்கப்பட்டுவிட்டாலும், ஜெய்கவிதாவின் சொத்துகளின் அசல் பத்திரங்களை ஒப்படைக்காமலும், கடன்தீர்வு ரசீதை பதிவுசெய்து கொடுக்காமலும் கரூர் சிண்டிகேட் வங்கி தாமதப்படுத்தியது.

இதையடுத்து, கரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெய்கவிதா தொடர்ந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம்: கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் அதற்கான ரசீதை பதிவு செய்து கொடுக்கவேண்டும். ஜெய்கவிதாவுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளின் அசல் பத்திரங்களை வழங்குவதுடன், அலைக்கழித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.3 ஆயிரத்தை கரூர் சிண்டிகேட் வங்கி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in