Published : 26 May 2020 06:48 am

Updated : 26 May 2020 06:48 am

 

Published : 26 May 2020 06:48 AM
Last Updated : 26 May 2020 06:48 AM

கரோனா வைரஸ் தொற்று குறித்த கையேட்டை அனைத்து மாவட்டங்களிலும் வழங்க வேண்டும்: மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

coronavirus-guidelines

சென்னை

கரோனா வைரஸ் தொற்றும் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளும் அடங்கிய கையேட்டை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு வழங்க மாவட்டநிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றும்தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் அடங்கிய ‘அறிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் கையேடு ஒன்றை தயாரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது தமிழக அரசு அனுப்பியுள்ளது. அதில், கரோனா வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள், பரவும்விதம், நோய்தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை முறைமற்றும் மையங்கள், மருத்துவமனை விவரங்கள் உள்ளிட்டஅனைத்து தகவல்களும் படங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த கையேட்டை தேவையான எண்ணிக்கையில் அச்சடித்து அனைத்து பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள் தொகை அதிகமாகஉள்ள ஊராட்சி பகுதிகளில் வீடுகள் தோறும் விநி யோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கையேட்டில், காய்ச்சல்,வறட்டு இருமல், சளி, மூச்சுத்திணறல் இவற்றுடன் உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு,மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றை தடுக்க செய்யவேண்டியவை குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் இதில் வழங்கப்பபட்டுள்ளன. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க, நடைப்பயிற்சி, உடற்பயிற்சியுடன் பழங்கள், காய்கறிகள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், மோர், இளநீர் அருந்தலாம். நீராவி பிடிக்கலாம்.

மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு,பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இருப்பிடத்தில் தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் காலை 10 மணிக்கு முன், மாலை 4 மணிக்கு பின் சூரிய ஒளியில் நிற்கலாம். கபசுர குடிநீர்அருந்தலாம். மருத்துவரின் அறிவுரைப்படி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டு கண்காணிப்பு பெட்டியில், தெர்மா மீட்டர், நாடித்துடிப்பு பிராணவாயு அளவிடும் கருவி, கையுறை, கிருமிநாசினி போன்றவை வைத்திருக்க வேண்டும். உடலின் வெப்பநிலை 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும். நாடித்துடிப்பு 70 முதல் 100-க்குள் இருக்க வேண்டும். சுவாசம் சராசரியாக 16 முதல் 18-க்குள் இருக்க வேண்டும். ரத்தத்தில் பிராண வாயு 95 முதல் 100 வரைஇருக்க வேண்டும். இதில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனை பெற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 120 555550, தொலைபேசி எண்களான 044 -2951 0400, 2951 0500, 2430 0300, 4627 4446 மற்றும் 94443 40496,87544 48477 அவசர உதவி எண் 104மற்றும் தமிழக அரசின் ‘stopcoronatn.in’ என்ற இணையதளத்திலும் தகவல்களை பதிவு செய்து தொடர் சேவையை பெறலாம். இத்தகவல்கள் அந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கரோனா வைரஸ் தொற்றுதமிழக அரசு உத்தரவுCoronavirus guidelines

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author