

கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கோவில்பட்டி அருகே லட்சுமிபுரத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகள். சூறைக்காற்றால் இளையரச னேந்தல் சாலை லட்சுமி புரத்தில் விவசாயி சுப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் குலைதள்ளும் நிலையில் வளர்ந்திருந்த 400 வாழைகள் சாய்ந்தன.
இதேபோல், லட்சுமியம் மாள்புரத்தில் விவசாயி ராஜாராம் என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தில் அமைத்திருந்த காய்கறி பந்தல் சரிந்ததால் சுரைக் காய், பாகற்காய், புடலங்காய் ஆகியவையும் வெங்கடாசலபுரத்தில் சில வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன.