Published : 25 May 2020 08:29 AM
Last Updated : 25 May 2020 08:29 AM

ஆர்.எஸ்.பாரதி கைது திமுக பேச்சாளர்களுக்கான எச்சரிக்கை: பாஜக பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கருத்து

கோவையில் கிராம கோயில் பூசாரிகள், முடிதிருத்துவோருக்கு `மோடி கிட்' நிவாரணப் பொருட்களை வழங்கிய பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் முடி திருத்தும் தொழிலாளர்கள், சிறு கோயில் பூசாரிகள் மற்றும் கிராமியக் கலைஞர்கள் 300 பேருக்கு ‘மோடி கிட்' மளிகைப் பொருட்களை, பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புச் செயலர் பி.எம்.நாகராஜ், மாநிலச் செயலாளர் லக்ஷ்மிநாராயணன் உள்ளிட்டோர் வழங்கினர். செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: திமுக-வை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாஜக மீதான அபிமானம் அதிகரித்து வருகிறது.

திமுகவினர் தொடர்ந்து பட்டியல் இனத்தவரை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை, திமுக பேச்சாளர்களுக்கான எச்சரிக்கையாக பார்க்கிறோம்.

‘மோடி கிட்'

தமிழகத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருட்களும், 40 லட்சம் பேருக்கு முகக் கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் பாஜக மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு சானிடைசர், தினமும் 500 முதல் 1,000 பேருக்கு உணவு, 2,000 பேருக்கும் மேல் ரூ.1,000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் கொண்ட `மோடி கிட்', ஒரு லட்சம் பேருக்கு முகக்கவசங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் கிராம கோயில் பூசாரிகள், முடிதிருத்துவோருக்கு `மோடி கிட்' நிவாரணப் பொருட்களை வழங்கிய பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x