Published : 25 May 2020 07:55 AM
Last Updated : 25 May 2020 07:55 AM

மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் வரத்து குறைவாக இருந்ததால் விரைவாக விற்று தீர்ந்தது

மீன் சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாக இருந்ததால் மீன்கள் விரைவாக விற்று தீர்ந்தன.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகளை தவிர்த்து பைபர் படகு, நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பைபர் படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு, சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று 6 டன் மீன்களை பிடித்து வந்தனர். இவை காசிமேடு மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் சந்தையில் மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்களும், மொத்த வியாபாரிகளும் வர தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல மீன்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.850, கருப்பு வவ்வால் ரூ.600, சங்கரா ரூ.300, நண்டு ரூ.340 என விற்பனை செய்யப்பட்டது.

இதே போல், நொச்சிக்குப்பம் மீன் சந்தை, வடபழனி மீன் சந்தைஉள்ளிட்டவற்றிலும் மீன்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. இதனால், ஒரு சில மீன் சந்தைகளில் சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

சமூக இடைவெளியுடன்...

இதேபோல், ஆடு. கோழி விற்பனை செய்யும் இறைச்சி கடைகளிலும் நேற்று பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் இறைச்சி வாங்க வந்தனர். அவர்கள் கடைகளுக்கு வெளியேஇடைவெளிவிட்டு நிற்க வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, ஒருவர் பின் ஒருவராக இறைச்சிகளை வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x