

கட்டுமானப் பொருட்களின் செயற்கையான விலையேற்றத்தை தடு்க்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கட்டுநர் சங்கத் மாநிலத் தலைவர் ஆர்.பிரகாஷ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
கட்டுமானத் துறையினருக்குச் சேரவேண்டிய அனைத்து நிலுவைத் தொகையும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று மத்தியநிதி அமைச்சர் உறுதி அளித்தார். எனவே, மாநில அரசுப் பணிகளில்ஒப்பந்ததாரர்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
கரோனா ஊரடங்கால் 2 மாதங்களுக்குப் பிறகு இப்போது வேலையைத் தொடங்கும் நிலையில் சிமென்ட், இரும்புக் கம்பி, ஜல்லி,எம்-சாண்ட் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களின் விலை20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த செயற்கையான விலையேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும். மேலும், சிமென்ட்டுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை விரைவில் ஏற் படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.