வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெல்லையில் இருந்து சிறப்பு ரயிலில் ஒடிசா பயணம்

வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெல்லையில் இருந்து சிறப்பு ரயிலில் ஒடிசா பயணம்
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 11 மணியளவில் ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ரயிலில் தங்கள் சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் இருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 397 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்பேரில் அவர்கள் 12 பேருந்துகளில் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் தங்கள் சொந்த மாநிலத்துக்கு தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in