கேரளாவைப் பின்பற்றி குமரியில் ஒரு நாள் முன்னதாக ரம்ஜான் கொண்டாட்டம்: வீட்டிலேயே சமூக இடைவெளியுடன் தொழுகை

கேரளாவைப் பின்பற்றி குமரியில் ஒரு நாள் முன்னதாக ரம்ஜான் கொண்டாட்டம்: வீட்டிலேயே சமூக இடைவெளியுடன் தொழுகை
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. முஸ்லீம் மக்கள் வீட்டில் இருந்தவாறே சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (24ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் கேரளாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

கரோனா ஊரடங்கால் மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீடுகளில் இருந்தவாறு தொழுகை நடத்தினர்.

ரம்ஜானை முன்னிட்டு கேரளாவில் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. உணவகங்கள், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

அதே நேரம் கரோனா கட்டுப்பாடு தொடர்பான கேரள அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை, திருவிதாங்கோடு, குலசேகரம், களியக்காவிளை, தேங்காய்பட்டணம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை என மாவட்டத்தில் பரவலாக ரம்ஜான் கொண்டாட்டம் அமைதியான முறையில் நடந்தது.

குமரியில் மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் வீட்டு தளங்கள், மொட்டைமாடி போன்றவற்றில் குடும்பத்தினருடன் சமூக இடைவெளியுடன் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in