

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான முதல்வர் பழனிசாமி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, அவரது தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி ஒன்றிய அதிமுக கிளைச் செயலாளர்கள், கொங்கணாபுரம் ஒன்றிய கிளைச் செயலாளர்கள், நங்கவள்ளி ஒன்றிய கிளைச் செயலாளர்கள், கொங்கணாபுரம் பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூலாம்பட்டி பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நங்கவள்ளி பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வனவாசி பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஜலகண்டாபுரம் பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 3,150 நிர்வாகிகளுக்கு அரிசி சிப்பம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை எடப்பாடியில் முதல்வர் தொடங்கிவைத்தார்.
மீதமுள்ள நிர்வாகிகளுக்கு அவரவர் வசிக்கும் ஒன்றியங்களிலேயே, அரிசி சிப்பம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.