Published : 23 May 2020 07:15 PM
Last Updated : 23 May 2020 07:15 PM

ராமேசுவரம் கடற்பகுதியில் தொடர் சூறைக்காற்று: கடலில் வளர்க்கப்பட்ட பாசி வளர்ப்பு கூண்டுகள் சேதமடைந்து கரை ஒதுங்கின

ராமேசுவரம் கடற்பகுதியில் வீசும் தொடர் சூறைக்காற்றினால் மீனவர்கள் கடலோரத்தில் வளர்த்த கடல் பாசி கூண்டு வலைகள் சேதமடைந்து கரை ஒதுங்கின.

ராமேசுவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பிற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மீனவர்கள் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் ஆண்கள் கடலுக்குச் செல்வதால் பெண்களே அதிகளவில் பாசி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். அகார் பாசி, சிவப்பு பாசி, கப்பா பாசி ஆகிய மூன்று வகை பாசிகளை இங்கு அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

இந்த பாசிகளிலிருந்து விண்வெளி வீரர்களுக்கான உணவிலிருந்து, மருந்து, குளிர்பானம், வாசனைத் திரவியங்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ராமேசுவரம் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வீசி வருகிறது. சூறைக்காற்றினால் கடந்த மே 17 அன்று தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் சேதமடைந்தது.

கரை ஒதுங்கிய பாசி வளர்ப்பு கூண்டை சரி செய்ய முயலும் மீனவப் பெண்.

சூறைக்காற்றினால் மறுஅறிவிப்பு வரும் வரையிலும் ராமேசுவரம் மீன்வளத்துறையினர் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைக்குமாறும் அறிவித்தி உள்ளனர்.

இந்நிலையில் தொடர் சூறைக்காற்றினால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தோணித்துறை, முனைக்காடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் பாசி கூண்டு வலைகள் சேதமடைந்து சனிக்கிழமை கரை ஒதுங்கின.

இதனால் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பயிர் காப்பீடு போன்று கடலில் இயற்கை சீற்றத்தினால் வரும் எதிர்பாராத இழப்பைச் சரிக்கட்ட காப்பீடு வசதியும் அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்தனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x