மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேசுவரம் கடலில் இறங்கி இளைஞர் பெருமன்றத்தினர் அரை நிர்வாணப் போராட்டம்

ராமேசுவரம் வில்லூண்டிக் கடற்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் வில்லூண்டிக் கடற்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ராமேசுவரம் கடலில் இறங்கி அரை நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர்.

ராமேசுவரத்தில் உள்ள வில்லூண்டி கடற்கரையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக சனிக்கிழமை கடலில் இறங்கி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா துணை செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் கடந்த இரண்டு மாதங்களாக கடலுக்குச் செல்லாத விசைப்படகு மீனவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கடந்த வாரம் சூறாவளிக் காற்றினால் சேதமடைந்த 100 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கரோனா நோய் தொற்றைப் பரப்பும் அபாயம் உள்ள டாஸ்மார்க் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரை நிர்வாணமாக மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in