

தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 83 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில், 52 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒருவர் கீழப்புலியூரைச் சேர்ந்தவர். இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இவர், யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொருவர் முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவர், சென்னையில் இருந்து வந்தவர் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் ராஜா தெரிவித்தார்.