மே 23-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

மே 23-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்து 753 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128 ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 250
மண்டலம் 02 மணலி 115
மண்டலம் 03 மாதவரம் 192
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 881
மண்டலம் 05 ராயபுரம் 1768
மண்டலம் 06 திருவிக நகர் 1079
மண்டலம் 07 அம்பத்தூர் 402
மண்டலம் 08 அண்ணா நகர் 783
மண்டலம் 09 தேனாம்பேட்டை 1000
மண்டலம் 10 கோடம்பாக்கம் 1300
மண்டலம் 11 வளசரவாக்கம் 650
மண்டலம் 12 ஆலந்தூர் 100
மண்டலம் 13 அடையாறு 513
மண்டலம் 14 பெருங்குடி 137
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 148
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 46

மொத்தம்: 9,364 (மே 23-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in