Published : 23 May 2020 07:40 AM
Last Updated : 23 May 2020 07:40 AM

ஊரடங்கின்போது விதி மீறி மது விற்பனை- டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்

கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டன. அன்று விற்பனையான பணத்தை பணியாளர்கள் வங்கியில் மறுநாள் செலுத்தினர். மதுபாட்டில்கள் கடைகளிலேயே இருப்பில் வைக்கப் பட்டன. பல இடங்களில் கடைகளை உடைத்து திருட்டு, முறைகேடாக மது விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்தன.

ஊரடங்கும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால் மதுபாட் டில்களை டாஸ்மாக் நிர்வாகமே கிட்டங்கிக்கு மாற்றியது. அப்போது ஒப்படைக்கப்பட்ட மது வுக்கும், மார்ச் 24-ல் கடைகள் அடைக்கப்பட்டபோது காட்டப்பட்ட இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசத் தொகையை வங்கியில் செலுத்தும்படி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் பணியாளர்கள் செலுத்தினர்.

தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில், இருப்புக் குறைவுக்கு அபராதம் 50%, வட்டி 4%, இத்தொகைக்கு ஜிஎஸ்டி 18% சேர்த்து செலுத்த வேண்டும். மோசடிகளைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல் விதி 2014-ன் படி இத்தொகை வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறிய தாவது: தமிழகத்திலுள்ள 5,300 கடைகளில் 95% கடைகளில் இருப்புக் குறைவு இருக்கிறது. உதாரணமாக ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் இருப்பு குறைந்தால், 50% அபராதம் ரூ.5 ஆயிரம், 4% வட்டி ரூ.200, 18% ஜிஎஸ்டி ரூ.936 என மொத்தம் ரூ.6,136 செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சில கடைகளில் ரூ.12 லட்சம் வரை இருப்புக் குறைவு இருந்துள்ளது. இக்கடை பணியாளர்கள் ரூ.7 லட்சத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டும். அபராதத்தை மே 24-க்குள் செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இத்தொகை ரூ.20 கோடியைத் தாண்டும். மாநிலம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் அரசுக்கு வரு மானம் கிடைக்கும். இத்தொகையை வசூலித்த பின் னரும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக வேறு நட வடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x