Published : 23 May 2020 07:14 AM
Last Updated : 23 May 2020 07:14 AM

தமிழக பாஜக தலைவருடன் செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்தித்துப் பேசினர்.

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டபல்வேறு கட்சித் தலைவர்களை ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், ‘கல்’ பப்ளிகேஷன்ஸ் (தினகரன்) மேலாண் இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,கோவை தினமலர் பதிப்பாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் சந்தித்து கரோனா ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து பேசி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை ‘இந்து’ என்.ராம், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், எல்.ஆதிமூலம் ஆகியோர்நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, இந்த மூவருடன் ‘தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கைகடிதத்தை எல்.முருகனிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பின்போது, பாஜகமாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக முருகன்கூறும்போது, ‘‘அச்சு காகிதத்துக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநிலஅரசுகளின் விளம்பர நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட அச்சு ஊடகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x