ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறப்பு: பயணிகள் இல்லாததால் வெறிச்சோடின

நாடு முழுவதும் ஜூன் 1 முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கான இணையதள டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. சென்னை சென்ட்ரல் டிக்கெட் முன்பதிவு மையத்தில்  2 கவுன்ட்டர்கள் திறந்திருந்தன. இருப்பினும் தமிழகத்துக்கு ரயில் சேவை அறிவிக்கப்படாததால் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.படம்: க.பரத்

Updated on
1 min read

நாடுமுழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. இருப்பினும், குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால், முன்பதிவு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வரும் 1-ம் தேதி முதல் 200 விரைவு ரயில்களின் சேவை தொடங்கவுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்துவரும் சூழலில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடுமுழுவதும் பெரும்பாலான இடங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படத் தொடங்கின. தெற்கு ரயில்வேயில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூரு, சென்னை சென்ட்ரல் ஆகிய முன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுன்ட்டர்கள் கொண்டு நேற்று செயல்படத் தொடங்கின. தமிழகத்துக்கு எந்த ரயிலும் இல்லை என்பதால் சென்னை சென்ட்ரல் முன்பதிவு மையத்தில் நேற்று கூட்டம் இல்லாமல் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in