காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு

காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி அருகே வேப்பங்குளம் கிராமத்தில் 350 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. ஏழு கண்மாய்கள் இருந்தும் தொடர் வறட்சியால் விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டன.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து தங்களது சொந்த முயற்சியால் கண்மாய்கள், வரத்து கால்வாய்களை தூர்வாரினர்.

இதனால் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய்கள் நிறைந்து இருபோகம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் வேப்பங்கும் பகுதியில் 400 ஏக்கரில் சூரிய மின்திட்டம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

இப்பகுதியில் இருந்து தான் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. சூரிய மின்திட்டத்தால் வரத்துக்கால்வாய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூரிய மின் திட்டத்திற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சித்தலைவர் சித்ரா கணேசன், சமூக ஆர்வலர் திருச்செல்வம் கூறியதாவது: விவசாயம் நிறைந்த பகுதியில் சூரிய மின் திட்டம் அமைத்தால், நீர்வரத்து பாதிக்கப்படும். கிராம சபை கூட்டத்திலும் சூரிய மின் திட்டம் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

ஊர் மக்களின் பங்களிப்புடன் கண்மாய், வரத்துக்கால்வாய்களை தூர்வாரி தரிசாக கிடந்த நிலத்தை நெல் விளையும் பூமியாக மாற்றினோம். தற்போது மீண்டும் வரத்துகால்வாய்களை மூடுவதால் விளைநிலங்கள் தரிசாக மாறும், என்று கூறினர்.

தனியார் நிறுவன மேலாளர் ராஜன்பாபு கூறுகையில், ‘கண்மாய் வரத்துகால்வாய்களை மறைக்கவில்லை. எங்களுக்கு தண்ணீர் தேவை இல்லை என்பதால் ராட்சத ஆழ்த்துளை கிணறுகளும் அமைக்கவில்லை, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in