கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை பெற்றது 'ஆர்சனிக் ஆல்பம் 30': அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தாக 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து செயல்படுகிறது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (மே 22) சென்னை, ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க மனித குலம் தடுப்பு மருந்தை நிச்சயம் கண்டுபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. போலியோ, மீசல்ஸ், பெரியம்மை உள்ளிட்டவை மனித குலத்துக்குப் பெரும் சவாலாக இருந்தன. ஆனால், அவற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.

இவற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னதாக, யுனானி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றின் மூலம் நம் முன்னோர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக, பல்வேறு முயற்சிகளை எடுத்து, பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தது மனித குலத்திற்கு உபயோகமாக இருந்தது.

ஹோமியோபதி மருத்துவத்தில் 'ஆர்சனிக் ஆல்பம் 30' என்பது ஏறக்குறையாக கேடயம் போன்று செயல்படுகின்றது. உயிரைக் காக்கும் கேடயமாக இது செயல்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் உருவாக்கும் வல்லமை பெற்றது இது".

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in