Published : 22 May 2020 11:38 AM
Last Updated : 22 May 2020 11:38 AM

உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழந்ததால் சர்ச்சை

உதகை

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த பாம்பேகேஸில் பகுதியைச் சேர்ந்த முரளி (55) என்பவரின் மகள் மாயா (21). உதகை அரசினர் தாவரவியல் பூங்கா அருகே தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருந்த இவருக்கு, நேற்றுமுன் தினம் பெண் குழந்தை பிறந்துள்ள தாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்இரவு சுமார் 11 மணியளவில் மாயா இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த மாயாவின் குடும்பத்தினர், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், மருத்துவரின்அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறையில் புகார் தெரிவித்த னர். உடனடியாக மருத்துவ மனைக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

உறவினர்களின் அறிவுறுத் தலால், மாயாவின் உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது.

இதுகுறித்து உதகை கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை யில் விசாரணை நடந்து வருகி றது. உயிரிழப்பு சர்ச்சையால், மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கதடை விதிக்கப்பட்டது.

கோட்டாட்சியர் சுரேஷ் கூறும்போது, ‘பெண் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை யில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரி டம் விசாரணை அறிக்கை சமர்ப் பிக்கப்படும். மருத்துவ அதிகாரி களின் விசாரணைக்குப் பின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x