

கரூர் மாவட்ட எஸ்.பி ரா.பாண்டியராஜனிடம் மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 18-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கரூர் எம்.பி செ.ஜோதிமணி, பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததுடன், வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார்.
எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரி வித்துள்ளனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் ஜோதிமணி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.