Published : 22 May 2020 07:21 AM
Last Updated : 22 May 2020 07:21 AM

வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பில் இருந்து இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு அமைத்துள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பி.ஆர்.பாண்டியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கால் வயல்களிலேயே வீணாகிவரும் 80 சதவீத விளைபொருட்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சந்தை ஒப்பந்த முறையில், உற்பத்தி செய்த விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன் நிலுவையை அரசே ஏற்றுக்கொண்டு மறுஉற்பத்திக்கு புதிய கடன் வழங்க வேண்டும்.

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய் யப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.

மரபணு மற்றும் வீரிய ஒட்டு விதைகளுக்கு தடை விதிப்பதுடன், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை கைவிட்டு, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 வகையான பரிந்துரைகளை மனுவில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x