Published : 22 May 2020 07:07 AM
Last Updated : 22 May 2020 07:07 AM

அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 79 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை நடவடிக்கை

தமிழகத்தில் ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி பேருந்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இருக்கைகளில் எண்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.படம்: ம.பிரபு

சென்னை

அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக கூடுதலாக 79 பேருந்துகள் இயக்கப்படுவதாக என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாளர்கள் பணியாற்ற ஏதுவாக, 200 பேருந்துகள் கட்டணஅடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், அரசின்அனுமதி பெற்று, தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம்உள்ளிட்ட பல்வேறு துறைகளின்அலுவலர்களுக்காக 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின் றன.

இதேபோல், விழுப்புரம் அரசுபோக்குவரத்து கழகத்தின் சார்பிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர்,விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்களுக்காக 49 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x