

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 253 ஆகியிருக்கிறது.
மகராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிவரும் நிலையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரையில் 242 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது.