

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று 6 ‘கரோனா’ நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ‘கரோனா’ நோயாளிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுகின்றனர்.
கடந்த சில வாரமாக சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று 20-ம் தேதி வரை 172 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 108 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ‘கரோனா’ பாதிப்பும் ஒரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.
கடந்த 12ம் தேதி 11 பேரும், 13ம் தேதி 19 பேரும், 17ம் தேதி 4 பேரும், 18ம் தேதி ஒருவரும், நேற்று முன்தினம் 3 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இன்று ஒரே நாளில் குணமடைந்த 6 ‘கரோனா’ நோயாளிகளை டீன் சங்குமணி மற்றும் மருத்துவக்குழுவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.