

தென்காசி மாவட்டத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்காசியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 75 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 50 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 3 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். 5 பேர் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இவர்கள் சேர்வைகாரன்பட்டி, ஓடைமரிச்சான், பொய்கை, அரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அரியநாயகிபுரத்தில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நன்னகரம், புளியங்குடி, சேர்ந்தமரம், பொய்கை, காளத்திமடம், வெங்கடேஸ்வரபுரம், சுப்பையாபுரம், ராஜகோபாலப்பேரி, கிருஷ்ணப்பேரி, கண்டப்பட்டி, வென்றிலிங்கபுரம், பொட்டல்புதூர், மடத்துப்பட்டி, புதுப்பட்டி, வீரகேரளம்புதூர், செல்லப்பிள்ளையார்குளம், கல்லூரணி, வாகைகுளம், சேர்வைகாரன்பட்டி, ஓடைமரிச்சான், அரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.