Published : 25 Aug 2015 09:46 AM
Last Updated : 25 Aug 2015 09:46 AM

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்திறனை அதிகரிக்க மாதிரி திட்டம்: பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள நீர்நிலை களின் கொள்திறனை அதிகரிக்க மாதிரி திட்டம் உருவாக்கப்பட் டுள்ளது என்றும் இத்திட்டத்தின் கீழ் தூர் வாருவதற்கு 5 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரக் கோரி தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந் தார்.

இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘‘ஸ்ரீவைகுண்டம் அணை யில் தூர் வாரும் பணி வேகமாக நடைபெறவில்லை. அணை மட்டு மல்லாது, அதிலிருந்து வெளி யேறும் நீர் நிரம்பும் 53 நீர்நிலைகளிலும் ஒரே நேரத்தில் தூர் வாரப்பட வேண்டும்’’ என வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அதிகாரி, ‘‘மத்திய அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்திறனை மேம்படுத்த மாதிரி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தூர் வாரும் பணி மேற்கொள்ள வைகை (தேனி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மேட்டூர் (சேலம்), அமராவதி (திருப்பூர்), வைகுண்டம் (திருநெல்வேலி) ஆகிய 5 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி களுக்காக பல்வேறு ஆய்வு களும், மதிப்பீடுகளும் செய்யப் பட்டு வருகின்றன.

மேலும் மாநிலத்தில் உள்ள அணைகளை தூர் வார அரசு சார்பில் தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ‘‘5 அணைகளில் தூர்வார திட்டமிட்டிருப்பதைப் போன்று அனைத்து நீர்நிலை களிலும் தூர்வார அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணா வதைத் தடுக்க அணை மற்றும் அதை சுற்றியுள்ள 53 நீர் நிலைகளிலும் ஒரே நேரத்தில் தூர் வார வேண்டும்’’ என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாவதைத் தடுக்க அணை மற்றும் அதை சுற்றியுள்ள 53 நீர்நிலைகளிலும் ஒரே நேரத்தில் தூர் வார வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x