கருணாநிதியின் தொகுதி நிதியில் கட்டப்பட்டு 7 மாதங்களாகியும் திருவாரூரில் திறக்கப்படாத ரேஷன் கடை: ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் புகார்

கருணாநிதியின் தொகுதி நிதியில் கட்டப்பட்டு 7 மாதங்களாகியும் திருவாரூரில் திறக்கப்படாத ரேஷன் கடை: ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் புகார்
Updated on
1 min read

திருவாரூர் நகராட்சியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு 7 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாக ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த வாசகர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

"திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு, ஐநூற்றுப் பிள்ளையார் கோயில் தெருவில், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரான திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6.30 லட்சத்தில் ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் கடந்த ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 7 மாதங் களாகியும் மக்களின் பயன்பாட் டுக்கு கொண்டுவரப்படாமல் பூட் டியே கிடக்கிறது. இந்தப் பகுதிக்கான ரேஷன் கடை வழக்கம்போல காந்தி சாலையில் வாடகைக் கட்டிடத்திலேயே இயங்கி வரு கிறது. இதனால், பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மக்களின் வரிப்பணமும் வீணாகிறது. கூட்டுறவுத் துறை வாடகையும் செலுத்த வேண்டியுள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்ட அந்த மனுவுக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அலுவலர், “கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கட்டிடம் கூட்டுறவு விற்பனை சங்கத்திடம், திருவாரூர் நகராட்சியால் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. ஒப் படைத்தவுடன் விரைவில் திறக்கப் படும்” என பதில் அனுப்பினர்.

இதுகுறித்து, நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, அரசியல் காரணங்களால் திறக்கப்படாமல் உள்ளதாகவும், மீறி திறந்தால், தனது வேலை பறிபோக வாய்ப்பு உள்ளது என்றும் அதுதொடர்பான அலுவலர் தெரிவித்தார்.

நிலைமையை விளக்கி மீண்டும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப் பப்பட்ட கோரிக்கை மனுவுக்கு, பதிலளித்த கூட்டுறவுத் துறை அலுவலர், “திருவாரூர் கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் இந்த ரேஷன் கடை கட்டிடத்தை கையகப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திருவாரூர் நகர்மன்றத் தலைவரிடம் கட்டிடத்தின் சாவியைப் பெற்று, ஜூலை இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு ரேஷன் கடை திறக்கப்படும்” என எழுத்து மூலமாக பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடை திறக்கப் படவில்லை. எனவே, தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு உடனடியாக ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in