ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 

தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு நிவாரணப் பொருட்களை ஆசிரியர்கள் வழங்கினர்.
தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு நிவாரணப் பொருட்களை ஆசிரியர்கள் வழங்கினர்.
Updated on
1 min read

தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது சக ஆசிரியர்களிடம் நிதியுதவி பெற்று, அரிசி, மளிகை பொருட்கள் என ரூ.1,000 மதிப்புள்ள பொருள்களை 30 மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தாய், தந்தை இழந்த குழந்தைகளே அதிகளவில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் வேலையின்றி உணவிற்கே சிரமப்பட்டனர்.

இதையறிந்த தலைமை ஆசிரியர் செல்லையா, சக ஆசிரியர்களிடம் நிதியுதவி பெற்று, அரிசி, மளிகை பொருட்கள் என ரூ.1,000 மதிப்புள்ள பொருள்களை 30 மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார்.

உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்களை பெற்றோர் மனதார பாராட்டினர்.

ஊராட்சித் தலைவர் மாலாமணிமாறன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, விமலாரூத், லில்லிமேரி, ஞான ரீத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in