கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய ஒரு வாரத்தில் புதிய விதிகள் - சிஎம்டிஏ தகவல்

கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய ஒரு வாரத்தில் புதிய விதிகள் - சிஎம்டிஏ தகவல்
Updated on
1 min read

கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மூன்றாம் தரப்பு ஆலோசகர், தொழிலாளர்களுக்கு காப்பீடு உள் ளிட்ட புதிய விதிகள் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த மவுலிவாக் கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து, 50-க் கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த விபத்து குறித்து விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை, கடந்த 25-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய் யப்பட்டது. அனுமதி பெற்ற வரைபடத் துக்கு மாறாக கட்டிடம் கட்டியதே விபத்துக்கு காரணம் என்று அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் ஒவ்வொரு நிலை யிலும் கட்டுமானத்தை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் கட்டிடங் களை கண்காணிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்பீடு செய்யுமாறு பெருந்திட்டப் பணிகளை மேற்கொள் ளும் கட்டுமான நிறுவனங்களை வலி யுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து புதிய கட்டிட விதிகளை அமல்படுத்த சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இது குறித்து சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டிடத்தின் தரத்தை உறுதி செய் வதற்கு பல்வேறு புதிய விதிகள் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகப் படுத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் வகையில் சிஎம்டிஏ மூலம் மூன்றாம் தரப்பு ஆலோசகர்களைக் கொண்டு கட்டிட பணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் படி, தொழிலாளர்களுக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். இவை தவிர வேறு சில பாதுகாப்பு ஏற்பாடுகளும் புதிய விதிகளில் இடம் பெறும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது 150 முதல் 200 பெருந்திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்களை கண்காணிப்பதற்காக, அவற்றின் தரம் பற்றிய அறிக்கையை கட்டமைப்பு பொறியாளர்களிடம் சிஎம்டிஏ கேட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in